Wednesday, October 14, 2009

ஜீவாமிர்தம்




தண்ணீர் - 200 லிட்டர்

பசுஞ்சாணி

நாட்டுமாடு - 10 கிலோ

கோமியம் - 10 லிட்டர்

வெல்லம் - 2 கிலோ

சிறுதானியங்கள் - 2 கிலோ
(பவுடராக அல்லது
முளைக்கட்டச்செய்து
அரைக்கப்பட்டதாக
இருப்பது அவசியம்)

இவற்றுடன் ஒரு கைப்பிடி
அளவு நல்ல ஜீவன் உள்ள மண்.


இவற்றை தொட்டியில் விட்டு கலக்க வேண்டும்.
தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விட வேண்டும்.
ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் உள்ளது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இவை இரட்டிப்பு அடைகின்றன. இப்பெருக்கத்தினை கணிணியாலும் கணக்கிட முடியாது. இந்த நுண்ணுயிர் கரைசல்தான் ஜீவாமிர்தம்.

இது ஒரு ஏக்கருக்கான அளவு.

இந்த கரைசலை வயலில் விடும்பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வந்து விடும். மண் வளமாகும்


8 comments:

ஹேமா said...

விஜய் இன்றுதான் பார்க்கிறேன்.
எனக்குப் புரியாவிட்டாலும் உபயோகமான தகவல்கள்.
வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

விஜய் said...

நானும் புரியாமல்தான் இருந்தேன் ஹேமா 3 வருடங்களுக்கு முன்பு. இன்று இயற்கை விவசாயத்தை பகிர வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். நஞ்சில்லா உணவை நாம் உண்பது அரிதாகிவிட்டது.

நன்றி ஹேமா.

கலையரசன் said...

அருமை தல...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

விஜய் said...

நன்றி நண்பா

எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

என்னுடைய கவிதை பதிவுகளுக்கும் ஆதரவு தாருங்கள்.

விஜய்

ஈரோடு கதிர் said...

அருமையான விசயங்களை சொல்ல தொடங்கியிருக்கிறீர்கள்

வாழ்த்துகள்

விஜய் said...

நன்றி கதிர்

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

விஜய்

Vetirmagal said...

மறுபடியும் தொல்லை கொடுக்கிறேன், மன்னிக்கவும்.

இந்த கரைசலை மாடி தோட்டத்தில் பயன்படுத்த நினைக்கிறேன். எத்தனை நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்?


நன்றி.

விஜய் said...

ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

தொந்தரவு ஏதும் கிடையாது.

யாரும் கேள்வி கேட்பதே கிடையாது !

தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி

விஜய்