Wednesday, March 10, 2010

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி


                     பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.
 

12 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தலைவரே இப்பதான் கிராமம் பக்கத்துல வீடு கட்டறேன் நல்ல ஒரு தோட்டம் போடணும் ஓரளவு வேலைகள் முடிஞ்ச உடனே தொடர்பு கொள்றேன், வீட்டுக்கு தேவையான செடி, மரங்கள், மூலிகை இன்னபிற பற்றி ஒரு விளக்கமும் உதவியும் தாருங்கள்..:))

விஜய் said...

நன்றி நண்பா

கண்டிப்பாக உதவுகிறேன்

அவசியம் தொடர்பு கொள்ளவும்

விஜய்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

விஜய் said...

Bogy.in Thanks for your wishes

Vijay

அன்புடன் மலிக்கா said...

ஆகா படமே சூப்பராக இருக்கே!
சாப்பிடனும்போல் தோனுது ரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதையும் செய்துபார்த்து சொல்கிறேன் சகோதரரே!..

விஜய் said...

@ மலிக்கா

சகோதரி இது பயிர் வளர்ச்சிக்கு

உணவுக்கு அல்ல

விஜய்

திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முனேற்ற சங்கம் said...

அன்புத்தமிழா,
வணக்கம்,
நான் வெங்கட்ராமன், பொருளாளர், திருச்சிராப்பள்ளிமாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம்.
சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னாள் ஏற்பட்ட பசுமைப்புரட்சி மற்றும் வெண்மைப்புரட்சி ஆகியவற்றின் பயன்களை நாமும் நமது சந்ததியினரும் வெகு சீறும் சிறப்புமாக அனுபவித்து வருகின்றோம், விளைவு புற்றுநோய் போன்ற மிகக் கொடிய நோய்கள். தற்போதைய நிலையில் ஏற்படும் இறப்புகளில் 10சதவீதத்திற்குமேல் புற்றுநோயால் ஏற்படுவதாக ஒரு கணக்கெடுப்பு அதிர்ச்சித்தகவல் வெளியிட்டுள்ளது. நீங்களே தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு சிறிய கணக்கெடுப்பு, உங்கள் பகுதியில் வசிக்கும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் எத்தனை பேருக்கு கர்பப்பை நீக்கப்பட்டுள்ளது?.

இத்தனை கொடுமைகளும் எதனால், நாம் உண்ணும் உணவே நஞ்சாக போனதனால் வந்தது. இதற்கு மேலாவது ஐயா நம்மாள்வார் மற்றும் தோழர் விஜய் போன்றோரைப் பின்பற்றி இயற்கை வேளாண்மை முறையினைப் பின்பற்றி நோயற்ற விழ்வினை வாழ்வோம்.

சமூக அக்கறையுடன் இந்த வளைத்தளத்தினை இயக்கிவரும் தோழர் விஜய் அவர்களுக்கு நன்றி.

பின்குறிப்பு: 1991ம் ஆண்டு எழும்பு புற்றுநோயினால் எனது இடதுகால் முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்டது. இந்த நிலை இனிமேலாவது வேறு யாருக்கும் நிகலாமல் இருப்பது நமது விவசாயிகளின் கையில் தான் உள்ளது.

ஆனால் விவசாயிகளின் வாழ்க்கை?.

விஜய் said...

@ வெங்கட்ராமன்

நண்பா இதுவரை கிடைத்த பாராட்டுகளிலேயே இதுவே உயர்ந்ததென நெகிழ்கிறேன்.

நமது சமுதாயம் இயற்கை வேளாண்மையின் பயனை உணர என்னால் முடிந்த சமூக பணிகளை மேற்கொள்கிறேன்.

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

(தங்களது தொலைபேசி எண் அளித்தால் நலம்)

விஜய்

ஜெகநாதன் said...

அகசூல் படிங்க
மகசூல் அள்ளுங்க :))

விஜய் said...

@ ஜெகன்

நண்பனின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி

விஜய்

சிங்கக்குட்டி said...

நல்ல பயனுள்ள பகிர்வு.

நன்றி.

விஜய் said...

@ சிங்கக்குட்டி

நன்றி நண்பா

விஜய்