Saturday, August 28, 2010

லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்



அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய ஒரு பாத்திரத்தில் பாதி அளவுக்கு நிரப்பி காற்று பத்திரத்திற்குள் போய் வருமாறு லேசாக மூடி வைக்க வேண்டும். அறையின் வெப்பநிலை இருபது முதல் இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஏழு நாட்களில் இந்த நீர் புளித்து அதில் இருந்த உமி பிரிந்த மேற்பரப்பில் ஆடை போல படர்ந்து இருக்கும். அதை ஒரு வடிகட்டி மூலம் அகற்றி விட வேண்டும். வடித்து வைத்திருக்கும் புளித்த நீரில் அதைப்போல பத்து மடங்கு பாலை சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். கெட்டு தட்டி போன  மாவு, புரதம் மற்றும் கொழுப்பு பொருட்களை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தை கலந்து மூடி வைக்கவும். இந்த கலவை சாதரணமாக நிலவும் அறை வெப்பத்திலேயே கெட்டு போகாமலிருக்கும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம் 


நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். நாட்டு பசுமாட்டு பால் சிறந்த பலனை தரும். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.


இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.