Thursday, January 2, 2014
Friday, August 3, 2012
மண்புழு
ஒரு வாளி தண்ணீரில் அரை கிலோ வெல்லத்தை கரைக்கவேண்டும். மாட்டுசாணம் அரை கிலோ சேர்க்கவேண்டும்.
இக்கலவையை அரைமீட்டர் நிலப்பரப்பில் ஊற்றி அதன்மேல் காய்ந்த சாணம் வைக்கோல் போட்டு அதன் மீது கோணி சாக்கு போர்த்தி மூடிவிடவேண்டும்.
தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால் இருபது முதல் இருபத்தைந்து நாட்களில் மண்புழு மண்டிக்கொண்டு நிற்கும்.
Wednesday, July 13, 2011
Saturday, July 2, 2011
கால்நடைத்துறை அமைச்சரிடம் கோரிக்கைகள்
நண்பர்களே, இந்த வாரம் கால்நடைத்துறை அமைச்சர் மாண்புமிகு.சிவபதி அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைக்க உள்ளேன்.
அவற்றில் சில
..... பாரம்பரிய இனங்களை பெருக்குதல்
..... பாரம்பரிய இனங்களின் விந்தணு வங்கிகளை தாலுக்காதோறும் அமைத்தல்
..... அசோலா வளர்த்தலை ஊக்குவித்தல்
..... கோமியத்திலிருந்து அர்க் மருந்துப்பொருள் தயாரிப்பை ஊக்குவித்தல்
..... மாடுகளை இடைதரகரில்லாமல் அரசே ஏலமையம் அமைத்தல்
......ஆதரவற்ற மாடுகளுக்கு அறநிலையத்துறை உட்பட்ட கோயில்களில் கோசாலை அமைத்தல்
மேலும் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும்.
Saturday, October 23, 2010
பாரம்பரிய நெற்காவலன்
பாரம்பரிய நெல் வகைகளை தேடி சேகரித்து ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக தந்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தில் மருதாநல்லூர் ஊரைச்சேர்ந்த எட்வின் ரிச்சர்ட்.
ராஜமுடி, கண்டசாலா நெல் ரகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும்.
தொடர்புக்கு :
94432 75902 Thursday, September 16, 2010
கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்
தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.
மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.
Saturday, August 28, 2010
லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்
அரிசி அலம்பிய கழுநீரை மூடியுடன் கூடிய ஒரு பாத்திரத்தில் பாதி அளவுக்கு நிரப்பி காற்று பத்திரத்திற்குள் போய் வருமாறு லேசாக மூடி வைக்க வேண்டும். அறையின் வெப்பநிலை இருபது முதல் இருபத்தைந்து டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஏழு நாட்களில் இந்த நீர் புளித்து அதில் இருந்த உமி பிரிந்த மேற்பரப்பில் ஆடை போல படர்ந்து இருக்கும். அதை ஒரு வடிகட்டி மூலம் அகற்றி விட வேண்டும். வடித்து வைத்திருக்கும் புளித்த நீரில் அதைப்போல பத்து மடங்கு பாலை சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். கெட்டு தட்டி போன மாவு, புரதம் மற்றும் கொழுப்பு பொருட்களை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளத்தை கலந்து மூடி வைக்கவும். இந்த கலவை சாதரணமாக நிலவும் அறை வெப்பத்திலேயே கெட்டு போகாமலிருக்கும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்
நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். நாட்டு பசுமாட்டு பால் சிறந்த பலனை தரும். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.
இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.
Subscribe to:
Posts (Atom)